பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

🕔 June 2, 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயணத் தடை இம்மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, இம் மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த பயணத் தடையை ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்த நீடிப்புடன் பயண தடை 23 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மே 21 முதல் மே 28 வரை விதிக்கப்பட்ட நாடு தழுவிய பயணத் தடை பின்னர் ஜூன் 07 வரை நீட்டிக்கப்பட்டு, தற்போது 14 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்