முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை முடிவு

🕔 June 1, 2021

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்காக, இன்று முதலாம் திகதி தொடக்கம் (2021 யூன் மாதம் 01 ஆம் திகதி) நடைமுறைக்கு வரும் வகையில், அதிகரித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக அமைச்சரவையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

முன் பள்ளி ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண சபையினால் மாதாந்தம் 04 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்