அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

🕔 May 22, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அந்தக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர் – குறித்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆயினும், மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்