மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு

🕔 May 21, 2021

ட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்ததேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் 07 பேர், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசேட மேல் நீதிமன்றம் இவர்களை விடுவிக்கும் உத்தரவை வழங்கியுள்ளது.

ஏப்ரல் 7, 2014 மற்றும் ஒக்டோபர் 6, 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், முறையான உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் அவன்ற் காட் நிறுவனம் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் 816 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 200935 ரவைகள் வைத்திருந்தமை தொடர்பாக துமேற்படி நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பின்னணியிலேயே தற்போது குறித்த சந்தேக நபர்கள் அனைவரும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்