மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு

இதன்போது, தமது தரப்பில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்புக்கு சென்றுள்ளவர்களை மீண்டும் மஹிந்த தரப்புக்கு கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பதென்றும், அதேநேரம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதென்றும் இந்த கலந்துரையாடலின்போது மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாட முன்னாள் திறைசேரி செயலர் பி.பி.ஜெயசுந்தரவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.