கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

🕔 May 10, 2021

லகம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாம் அலையினை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசிகளால் கொரோனா தொற்று விகிதம் பல நாடுகளில் குறைந்துள்ளது. இதற்கு இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் ஆகிய நாடுகளை உதாரணமாகக் கூறலாம்.

அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் செலுத்திய நாடுகளின் விவரத்தை ‘our world in data’ என்ற இணையதளப் பக்கம் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலிலுள்ள முதல் 15 நாடுகளின் விவரம் வருமாறு;

  1. இஸ்ரேல்: 63%
  2. பிரிட்டன்: 52%
  3. ஐக்கிய அரபு அமீரகம்: 51%
  4. மங்கோலியா: 49%
  5. பஹ்ரைன்: 47%
  6. அமெரிக்கா: 45%
  7. சிலி: 45%
  8. ஹங்கேரி: 45%
  9. கனடா: 39%
  10. கட்டார்: 39%
  11. உருகுவே: 35%
  12. பின்லாந்து: 35%
  13. ஜெர்மனி: 32%
  14. சேபியா 32%
  15. எஸ்டோனியா: 27.9%

எவ்வாறாயினும் உலக அளவில் இதுவரை 8.3% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கொரோன தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று, விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்காவும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்