பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டிருக்கிறார்கள்; ‘பட்ஜெட்’ குறித்து பந்துல கருத்து

🕔 November 21, 2015

Bandula - 087புதிய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு–செலவுத் திட்ட முன்மொழிவானது அலங்கோ­ல­மான பிச்சைக்­கா­ர­னுக்கு பவுடர் போட்டு, அவனை அலங்­க­ரித்­து­விட்­டதைப் போன்று அமைந்­தி­ருப்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குணவர்த்­தன தெரி­வித்தார்.

2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் வரவு – செலவு திட்டம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு விமர்­சித்­தார்.

இங்கு ஊட­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் கூறுகையில்;

“அடுத்த ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்­களை மட்டுமே கொண்­டுள்­ளது. வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக பொது­மக்­க­ளுக்கு எதுவித சலுகையும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே எனது கருத்­தாகும்.

மேலும் நெல் மற்றும் இறப்பர் பயிர்ச் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட எந்­த­வித நிவா­ர­ணங்­களும் இவ்­வ­ரவு செலவுத் திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

இவ் வரவு செலவு திட்டம் குறித்து மிகச் சுருக்­க­மாக கூறு­வ­தாயின், அலங்­கோ­ல­மாக திரியும் பிச்சைக்­கா­ரனை பிடித்து அவ­னுக்கு ‘பவுடர்’ போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்றதாகவே அமைந்திருக்கிறது. அதனைவிடுத்து வேறு எதனையும் இங்கு கூற முடியாது” என தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்