றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

🕔 April 25, 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின் கொழும்பு வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை அவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்