நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

🕔 April 5, 2021

ல்லாட்சி அரசாங்க காலத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸ், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று நீதியமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில்தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இதனைக் கூறினார்.

மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது இல்லை என்றும், அதனை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்