‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

🕔 February 27, 2021

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, பௌத்த பிக்குகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களின் முன்னிலையிலேயே அதாவுல்லா, மாகாண சபைகள் தொடர்பான தனது இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

நன்றி : தமிழ் வின்

Comments