“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை”

🕔 February 23, 2021

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தனது கோரிக்கை நிறைவேறும் வரை, எந்தவொரு அரசியல்வாதியையும் தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு குழுவொன்றினை அரசாங்கம் நியமிப்பதை முன்னராகவே அதனைக் குறைகூறிய பேராயர்; ‘க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத அரசியல்வாதி’ ஒரு பெரிய விடயத்தை முடிவு செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை, குறித்த அறிக்கையை இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு, நேற்று அமைச்சரவை தீர்மானித்தது.

குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அது பொதுமக்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்