ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று

🕔 January 27, 2021

ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, இதனை ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 07ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, பிரதியமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.

ஏற்கனவே 32 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்கள் 900 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்