சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

🕔 January 18, 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார் கைது செய்தனர்.

அனுராதபுரம் நகருக்கு அருகிலுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில், குறித்த சிறுவனை மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் – மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments