வெளிநாட்டு நாணயம் கடத்தியவர்கள் கைது

🕔 November 11, 2015

Dollar and euro - 012
லங்கை  நாணயப் பெறுமதியில் சுமார் 400 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை, இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் இருந்து 229,500 அமெரிக்க டொலர்களும், 50 ஆயிரம் யூரோக்களும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

மேற்படி இருவரும் தமது இடுப்புப் பகுதியில், வெளிநாட்டு நாணங்களை மறைத்து வைத்துக் கடத்த முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 45 வயதினைக் கொண்டவர்கள் என்றும், இவர்கள் கொழும்பில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்