மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் கைது

🕔 December 15, 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவுக்குசொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிண்ணியா பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments