பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

🕔 November 8, 2015
Faizer musthafa - 011மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு பகிர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை பொறுத்தவரையில், குறித்த அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிரப்படவேண்டும் என்று, அவர்கள் சர்வதேசத்திற்கு கூறுகின்றனர்.

எனினும், உள்ளுரில் சிங்கள மக்களிடம் இதனைக் கூறுவதற்குத் தயங்குகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரம் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்