அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

🕔 November 5, 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்த நிர்ணய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வௌ்ளை அல்லது சிகப்பு சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாகவும் நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வௌ்ளை அல்லது சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 89 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் இந்த நிர்ணய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன.

வர்த்தக அமைச்சினால் அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பில் கடந்த மே மாதம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தவே நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு – அரிசி ஆலை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கானது மட்டுமாதாகும். சில்லறை வியாபாரிகளுக்கானது அல்ல.

சில்லறை விற்பனையாளர்கள் அரிசியை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க முடியாது திண்டாடினர். அரிசி ஆலை உரிமையாளர்களும், உற்பத்தியாளர்களும் நேற்று வெளியான வர்த்தமானி அறிவிப்புக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்தால், சில்லறை வியாபாரிகள் முன்னர் அறிவிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்