தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு

🕔 October 20, 2020

ன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனுவை நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று செவ்வாய்கிழமை குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனுதாரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

இருப்பினும் தன்னுடைய கட்சிக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதா இல்லையா என தனக்கு இதுவரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த மனுவை நொவம்பவர் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் மனுதாரர் சார்பான உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அறிவித்துள்ளது.

Comments