அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு

🕔 October 19, 2020

ஐ.எல்.எம். நாஸிம் – 

க்கரைப்பற்று பிரதேசத்தில் கிணறு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்டவற்றினை இன்று திங்கள்கிழமை அரச புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.

அக்கரைப்பற்று சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட  நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற ரகசிய தகவலுகமைய    ரி81 ரக துப்பாக்கி , அதற்குரிய 30 தோட்டாக்கள், ஒரு ரவைக்கூடுகளை ஆகிவை இதன்போது மீட்கப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments