றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

🕔 October 14, 2020

டந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மூலம் அழைத்து செல்வதற்கான கட்டணத்தை, இவர் அரச பணத்திலிருந்து செலுத்தினார் என, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

Comments