வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

🕔 May 30, 2015

Mithri + Hakeem - 01வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை   சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

இதில், வீடமைப்பு மற்றும் கட்டிட நிர்மாணத்துறை பற்றிய பல காட்சி கூடங்கள் உள்ளன.

கட்டிட நிர்மாணம், பொறியியல், கட்டிடக்கலைத் தொழில்நுட்பம், நவீன தளபாடங்கள் மற்றும் இத்துறையில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் தொடர்பில், பயனுள்ள தகவல்களைப் பெறுவதற்கு இக்கண்காட்சி ஓர் அரிய சந்தர்ப்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Mithri + Hakeem - 03Mithri + Hakeem - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்