விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை

🕔 September 24, 2020

– றிசாத் ஏ காதர் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று வியாழக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. 

வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அச்சங்கத்தின் தலைவர் டொக்டர்  ஏ.சீ. அப்துல் ரஷாக் தலைமை தாங்கினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  ஐ.எம். ஜவாஹிர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இடமாற்றம் பெற்றுச் செல்லும் – பொது வைத்திய நிபுணர் அஜித் குமார,  சிறுபிள்ளை வைத்திய நிபுணர் திமுது சுபசிங்க மற்றும் இழையியல் நோய் நிபுணர் அசந்தி ஆகியோருக்கு இதன்போது பிரியாவிடை வழங்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்