அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

🕔 September 23, 2020

ந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார்.

காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் கடந்த 10 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

அரச கொள்கை பிரகடனத்திற்கமைய முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரித்தல், பால் மற்றும் தேசிய உணவு பயிர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments