அக்கரைப்பற்றில் கராட்டி மாணவர்களுக்கான தரப்படுத்தலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

🕔 September 7, 2020

– முன்ஸிப் –

ராம் கராட்டி தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும், கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ராம் தோ கராத்தே சங்கத்தின் தலைமைப் போதனாசிரியர் ‘சிஹான்’ கே. கேந்திரமூத்தியின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சங்கத்தின் செயலாளர் ‘சிஹான்’ எம்.பி. செய்னுலாப்தீன் (பாயிஸ்) மற்றும் கறுப்புப்பட்டி வீரர் ‘சென்சே’ எஸ்.ஏ. சராஜ் முகம்மட் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

இதன்போது தரப்படுத்தலில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பட்டிகள் பயிற்சி ஆசிரியர்களால் அணிவிக்கப்பட்டதோடு, அந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Comments