நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா
மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் மாளிகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அவ்வாறான எந்தவொரு கூட்டங்களும் நடத்தப்படவில்லை.
பெலவத்தை ஹக்குருகொட பாதுகாப்பு தலைமையகத்தை அமைப்பதற்கு செலவான அளவிற்கு ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் மாளிகை அமைக்க செலவாகியிருகக் கூடும்.