எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

🕔 November 2, 2015

Mahinda and Namal - 012முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்;

“என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிலர்; ‘எனது தந்தை அரசியலில் இருந்து ஓய்வுபெறா விட்டால், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, எங்களை சிறையில் தள்ளி விடுவார்கள்’ என்று கூறுகின்றனர்.

என்னை சிறையில் தள்ளினாலும், எனது தந்தை அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என்பதை, அந்த நபர்களுக்கும், தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்