புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு

🕔 August 10, 2020

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 ராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அமைச்சுக்களும் இதனுள் அடங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள், பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று திங்கட்கிழமை மாலை வௌியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களை தயாரிக்கும் போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் அதன் கடமைகள் குறித்து கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரிய கடமைகளுக்கு அமைய சிறப்பு முன்னுரிமைகளை அடைதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்துவதை இலகுவாக்கும் வகையில் ராஜாங்க அமைச்சுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Comments