மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்
– எம்.ஐ. சம்சுதீன் –
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு – கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யூ.எல்.ஏ. கரீம் தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12 கழகங்கள் கலந்துகொள்கின்றன. போட்டிகள் 12 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி கலந்து கொண்டு, போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
முதல் நாள் போட்டி – மட்டக்களப்பு பாடுமீன் மற்றும் ஏறாவூர் வை.எஸ்.சீ. விளையாட்டுக் கழகங்களிடையே நடைபெற்றது.
இப்போட்டியில், வை.எஸ். எஸ்.சீ. விளையாட்டுக்கழகம் – ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டது.