கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு

🕔 July 2, 2020

பிரபல போதை பொருள் வர்த்தகர் கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

பூஸா சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொ்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று புதன்கிழமை பாரிய குற்றங்களை இழைத்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் விசேட தேடலை மேற்கொண்டனர்.

இதன்போது காஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து எண்ட்ரோட் ரக கைத்தொலைப்பேசி மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிம் அட்டைகள் இரண்டும் மற்றும் கைத்தொலைபேசிக்கு பயன்படுத்தும் சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசிகள் மற்றும் பல உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டிருந்தனர்.

Comments