அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

🕔 June 24, 2020

னது உயிருக்கு கருணா அம்மான் இலக்கு வைத்துள்ளார் என்று முன்னாள் ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை, புலிகள் அமைப்பின் முன்ளாள் தளபதியும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றவருமான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார்.

தனது உயிருக்கு கருணமா அம்மான் இலக்கு வைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் ஹரீஸ் தெரவித்தமை குறித்து, கருணா அம்மானிடம் ஊடகவியலாளர் மப்றூக் கேட்டபோதே, அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஹரீஸ் கூறியுள்ளமை முற்று முழுதாக தவறானது. என்னால் அவருக்கு உயிராபத்து இருப்பதாக கூறியுள்ளார். இது முற்று முழுதாக தவறானது.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக ரீதியாகத்தான் நாங்கள் பேசி வருகின்றோம். தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றித்தான் நாம் கதைத்து வருகின்றோம். வேறு ஏதும் தவறாக நாம் பேசவில்லை.

ஹரீஸ் மேற்கொள்ளும் விடயங்கள் குறித்து வார்த்தைகளாலேயே நாம் பேசி வருகின்றோம்.

ஹரீஸ் கூறுகின்றமை போல், நான் அறிந்தவரை நிந்தவூரில் எதுவுமே நடக்கவில்லை.

அரசியலுக்காக ஹரீஸ் இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும், கருணா அம்மான் கூறினார்.

கருணா அம்மானின் குரல் பதிவு

தொடர்பான செய்தி: கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

Comments