ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

🕔 June 19, 2020

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என, ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஜனக்க டி சில்வா, இந்த உத்தரவை பிறப்பித்து தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் நேற்று வியாழக்கிழமை மூன்றாவது முறையாகவும் சாட்சியமளித்தார்.

Comments