மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர்

🕔 April 20, 2020

நாட்டில் இன்றைய தினம் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று திங்கள்கிழமை 32 கொரோனா தொற்றாளர்கள் (பிற்பகல் 4.00 மணி வரை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இவ்வாறு அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, இதுவே முதன்முறையாகும்.

இதனடிப்படையில் 303 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மறுபுறமாக 97 பேர் சுகமடைந்து தமது இருப்பிடம் திரும்பியுள்ளனர்.

உலகளவில், 23 லட்சத்து 87,502 பேர் – இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 164,194 பேர் இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.

Comments