தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

புத்தளத்தில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.