அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில்

🕔 October 27, 2015

Flood- 03
– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியுள்ளன.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் கல்முனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவி வந்தது. இந்த நிலையிலேயே தற்போது அடைமழை பெய்து வருகிறது.

இந் நிலையில், சில பிரதேசங்களில் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையினால் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன.

இதேவேளை, பெரும்போக நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் பெய்து வரும் அடை மழையானது, விவசாயிகளுக்கும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

(படங்கள்: எம்.ஐ.எம். நாளீர்)
Flood- 02Flood- 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்