கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

🕔 March 28, 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 09 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இதுவரையில் (சனிக்கிழமை காலை 11.00 மணி வரை) 106 பேர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Comments