கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

🕔 March 21, 2020

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார்.

தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்காக மக்கள் செயற்பட வேண்டுமெனவும் ராணுவத் தளபதி இதன்போது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Comments