தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

🕔 March 5, 2020

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்