கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு

🕔 February 29, 2020

க்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு குழுவினுடைய தலைவர் தான் மட்டும்தான் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

“நான் பெயரளவில் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதையும், பெயரளவில் வேட்பு மனு குழுவின் தலைவர் இல்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்”.

“நான் பெயரளவில் கூட்டணியின் தலைவராக செயற்பட போவதில்லை. புதிய விதத்தில் நாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி நாம் செயற்படவுள்ளோம்.

எனினும் ஒன்று பட்ட பயணம் என கூறி எம்மால் மோசடியான பயணத்தை மேற்கொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments