இஸ்ரேல் ராணுவத்துக்கு போலி ஆபாச படங்களை ஹமாஸ் அனுப்பி, கைத்தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சி

🕔 February 18, 2020

பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைத் தொலைபேசிகளை ஹேக் செய்ய ஹமாஸ் அமைப்பு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆபாச படங்கள் கைத் தொலைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்தப் படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும். அதனை தரவிறக்கிய கைத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்படும்.

ஆனால், ஹமாஸின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

“நாங்கள் இதனை கண்டுபிடித்துவிட்டதால் தகவல் எதுவும் களவாடப்படவில்லை” என்று கூறும் இஸ்ரேல் ராணுவம், இவ்வாறாக இஸ்ரேல் ராணுவத்துக்குள் மூன்றாவது முறையாக ஹமாஸ் ஊடுருவ முயற்சித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Comments