மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

🕔 February 11, 2020

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் ல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களில் பெத்தகேயும் ஒருவராவார்.

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவராக பெத்தகேயை நியமிக்கும் பொருட்டு, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கம் மற்றும் வலுவான ராஜதந்திர உறவுகளைக் கருத்தில் கொண்டு, மாலைதீவுடன் இலங்கை நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது.

Comments