மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம்

🕔 January 4, 2020

– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து மருத்துவமனைஅதிகாரிகளுடன் உரையாடியதுடன், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து மூதூர் வைத்தியசாலையின் குறைபாடுகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்தார்.  

பின்னர் மருத்துவமனையின் நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெறும் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களின் நலன் தொடர்பிலும் அளவளாவினார்.

டெங்கு தொற்றுநோய் அதிகரித்துக்காணப்படுவதனால் வைத்தியசாலை சூழலை சுத்தப்படுத்தி, நோயாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

கிழக்குமாகாண ஆளுநராக பதவியேற்ற அநுராதா யஹம்பத் வைத்தியசாலைக்கான முதல் விஜயமாக, மூதூர் வைத்தியசாலைக்குகுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 

Comments