கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்

🕔 May 29, 2015

Foot ball– ஐ.ஏ. ஸிறாஜ் –

கிழக்கு மாகாண மட்டத்திலான உதைப்பாந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதென மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன்  தெரிவித்தார்.

இதேவேளை, ஹொக்கி போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக நடைபெறவுள்ளன.

போட்டி நிகழ்ச்சிகள் சம்மந்தமாக, பங்கு பற்றும் கழகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்