இறுதி யுத்தத்தின்போது 7500 பேர் வரையில்தான் பலியாகியுள்ளனர்; பரணகம தெரிவிப்பு

🕔 October 22, 2015

Maxwell paranagama - 011காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளதாக, அந்த ஆனைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“எமது ஆணைக்குழுவானது, இரண்டு விடங்களுக்காக நியமிக்கப்பட்டது. முதலாவது, யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வது.

மற்றையது, இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, யரேனும் தவறிழைத்துள்ளனரா என்றும், எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க என்ன சேய்ய வேண்டு என்றும் கூறுவதேயாகும்.

எனவே, இவை தொடர்வில் ஆராய்ந்து – நாம் சமர்ப்பித்த அறிக்கை, நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை, 40,000 பேர் இறந்ததாக கூறப்பட்ட தருஸ்மான் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். ஐ.நா அறிக்கை உள்ளிட்டவற்றினை வைத்து பார்க்கும் போது, 7400 – 7500 பேர் வரையிலானவர்களே பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் விடுதலைப் புலிகளோ, ராணுவமோ குற்றம் இழைத்ததாகவும் அது நிரூபிக்கப்பட்டதாகவும் நாம் எங்கும் கூறவில்லை. யுத்தத்தின் போது சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் கூறப்பட்டுள்ளது.

ஆயினும், அவை நடைபெற்றன என்று நாம் உறுதியாக கூறவில்லை.  விசாரணை ஆணைக்குழுவுக்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமரப்பிக்குமாறு நாம் கூறியுள்ளோம். அதன் பின்னே முடிவெடுக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்