கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர்

🕔 December 18, 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையின் படி, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது, வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தன்னை கைது செய்வதற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் மரியாதைக் குறைவாகப் பேசியதாக, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டும் வீடியோ என்றும் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், அவ்வாறு தாம் பேசவில்லை என்றும், பொய் சொல்ல வேண்டாம் எனவும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் சம்பிக்க ரணவக்கவிடம் அந்த வீடியோவில் கூறுகின்றனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னரான வீடியோ

Comments