பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

🕔 November 21, 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து, இவர் உள்ளிட்ட சிலர் மீது நல்லாட்சி அரசாங்கத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும், ஆனால் அந்த வழக்கிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டமையும் நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்