ஜனாதிபதி செயலகத்தில் களையெடுப்பு

🕔 October 19, 2015
Presidential secretariat - 011னாதிபதி செயலகத்தில் தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாத முக்கிய அதிகாரிகள் பலரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலக முக்கிய பிரிவுகளின் செயலாளர்கள், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள், ஆலோசகர்கள் பதவிகளை வகிப்பவர்களே, இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் பதவிகளில் தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தினால் எடுக்கப்பட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்த விபரங்கள், அண்மைக்காலமாக வெளியாட்களுக்கு கசியவிடப்பட்டமை மற்றும் முக்கிய முடிவுகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடை போடப்பட்டமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்