சமூக வலைத்தளங்களை கையாள்வது தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

🕔 September 29, 2019

– அஹமட், படம்: பாறுக் ஷிஹான் –

மூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பொறுப்புமிக்க விதத்தில் பயன்படுத்துவது தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குரிய முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை அட்டப்பள்ளம் தோம்புக்கண்டம் விடுதியில் நடைபெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் விகல்ப செய்தித்தளம் ஆகியவை இணைந்து நடத்திய மேற்படி கருத்தரங்கில் சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் கையாள்வது தொடர்பிலிலும், அவற்றுக்கான தொழில்நுட்ட அறிவு பற்றியும் விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.

விகல்ப பிரதம ஆசிரியர் சம்பத் சமரகோன், இன்டநஷனல் டரான்ஸ்பேரன்ஸி நிலையத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் ஹரித்த தஹநாயக்க ஆகியோர் இதில் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இந்த கருத்தரங்குக்கான அனுசரணையை வழங்கியிருந்தது.

விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் இன் செயலாளர் சாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம்.எப். றிபாஸ் ஆகியோர் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை நெறிப்படுத்தியிருந்தார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்