ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. செயற்குழு தெரிவு செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுவை கூட்டி, காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினர், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக பேச்சுகள் பரவி வரும் நிலையில், அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என்றும் ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஜாதிக ஹெல உறுமயவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.