வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல்

🕔 September 22, 2019

பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லாது போகும்” என்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்