காரைதீவிலுள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 06 மாணவர்கள், திடீர் மயக்கம்

🕔 June 25, 2019

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டம் – காரைதீவிலுள்ள இரு பாடசாலைகளில் கல்வி கற்கும் 06 மாணவர்கள், மயங்கமடைந்தநிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் மற்றும் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த குறித்த  ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாடசாலை நேரத்தில் இந்த மாணவர்கள் மயக்கமடைந்தமையினை அடுத்து, அவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடீரென மயக்கமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்